தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நடிகர் விஜய்யின் 47ஆவது பிறந்தநாள்: ரசிகர்களின் மனித நேய உதவி - actor vijays fans celebrate birthday helping differently abled

மதுரையில் நடிகர் விஜய்யின் 47ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக 100 பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளின் குடும்பத்தினருக்கு விஜய் ரசிகர்கள் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

நடிகர் விஜய்யின் 47ஆவது பிறந்தநாள்
நடிகர் விஜய்யின் 47ஆவது பிறந்தநாள்

By

Published : Jun 6, 2021, 9:36 PM IST

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 22ஆம் தேதியன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் உற்சாகமாக கேக் வெட்டியும், பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்தும் கொண்டாடுவது வழக்கம்.

இந்த நிலையில் தற்போது தமிழ்நாட்டில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை அடுத்து வறுமையில் வாடும் பலருக்கும் விஜய் ரசிகர்கள் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.

அந்த வகையில் விஜய்யின் 47ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் மதுரை, சக்கிமங்கலம் பகுதியில் உள்ள 100 பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள், அவர்களின் குடும்பத்துக்கு இரண்டு வாரங்களுக்குத் தேவையான அரிசி, பருப்பு, காய்கறி சாமான்கள் அடங்கிய தொகுப்பினை விஜய் ரசிகர்கள் வழங்கினர்.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details