நடிகர் வடிவேலுவின் உடன் பிறந்த இளைய சகோதரர் ஜெகதீஸ்வரன் மறைவு மதுரை:நடிகர் வடிவேலுவின் சொந்த ஊர், மதுரை அருகே உள்ள் ஐராவதநல்லூர். வடிவேலுவுடன் 5 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் என மொத்தம் 7 நபர்கள் உடன் பிறந்தவர்கள். வடிவேலுவின் தம்பிகள் இருவரும் சொந்த ஊரில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், வடிவேலுவின் தம்பி ஜெகதீஸ்வரன் (52) 'காதல் அழிவதில்லை' , 'மலைக்கோவில் தீபம்' போன்ற படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில், இவர் மதுரையில் ஜவுளி வியாபாரம் செய்து வந்துள்ளார்.
இவ்வாறு ஐராவதநல்லூர் பகுதியில் வசித்து வந்த நடிகர் வடிவேலுவின் தம்பி ஜெகதீஸ்வரன், கடந்த சில மாதங்களாக கல்லீரல் பாதிப்பால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்து உள்ளார். இந்த நிலையில் ஜெகதீஸ்வரன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை (ஆகஸ்ட் 28) சிகிச்சை பலன் இன்றி காலமானார்.
இதையும் படிங்க:சென்னையில் உயர் மின்னழுத்தம் காரணமாக விபத்து; கர்ப்பிணி உட்பட 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!
அவரது உடலுக்கு குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக, ஐராவதநல்லூர் பகுதியில் உள்ள வீட்டில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. பலர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இவ்வாறு அவரது உடல் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், மதியம் 4 மணி அளவில் ஜெகதீஸ்வரனின் உடல் தகனம் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில், தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் பி.மூர்த்தி நேரில் வந்து மலர் வளையம் வைத்து மரியாதை செய்து வடிவேலுக்கு ஆறுதல் கூறினார்.
இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில்தான் வடிவேலுவின் தயார் சரோஜினி வயது மூப்பின் காரணமாக காலமாகி இருந்தார். தற்போது அவரது தம்பி உயிரிழந்து உள்ளார். ஒரே ஆண்டில் வடிவேலுவின் குடும்பத்தில் அடுத்தடுத்து இரண்டு உயிரிழப்புகள் நிகழ்ந்து உள்ளது, வடிவேலு மற்றும் அவரது குடும்பத்தினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திரைப் பிரபலங்கள் என பலர் வடிவேலு தம்பியின் மரணத்திற்கு இரங்கலையும், வடிவேலுவிற்கு ஆறுதலையும் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர் வடிவேலு. இவரது அசாத்திய நடிப்பாலும், நகைச்சுவையாலும் மக்களின் மனதைக் கவர்ந்தவர். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியாகி பலரது கவனத்தை ஈர்தத படம், 'மாமன்னன்'. அடுத்ததாக செப்டம்பர் 15ஆம் தேதி வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த 'சந்திரமுகி 2' படம் வெளியாக உள்ளது.
இதையும் படிங்க:திருமணம் மீறிய உறவு விவகாரம்; தகராறை தடுக்கச் சென்றவர் கத்திக்குத்தில் பலி!