தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நடிகர் வடிவேலுவின் தாயார் காலமானார் - சரோஜினி அம்மாள்

வைகைப்புயல் வடிவேலுவின் தாயார் உடல்நலக்குறைவால் காலமானார்.

நடிகர் வடிவேல் தாயார் காலமானார்
நடிகர் வடிவேல் தாயார் காலமானார்

By

Published : Jan 19, 2023, 9:07 AM IST

Updated : Jan 19, 2023, 11:16 AM IST

நடிகர் வடிவேலுவின் தாயார் காலமானார்

மதுரை:வைகைப்புயல் வடிவேலுவின் தாயார் சரோஜினி அம்மாள் (எ) பாப்பா (87), நேற்றிரவு (ஜன 18) காலமானார். உடல்நலக்குறைவால் அவதியுற்றுவந்த நிலையில் திடீரென வீட்டிலேயே காலமானார். இவரது மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். இறுதி சடங்களுக்கான ஏற்பாடுகள் நடந்துவருகின்றன. நகைச்சுவை நடிகர்கள் பலர் மதுரைக்கு சென்றுள்ளனர்.

இவரது மறைவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “நடிகர் வடிவேலுவின் அன்புத்தாயார் சரோஜினி அம்மாள் என்கிற பாப்பா மதுரை விரகனூரில் உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.

ஆளாக்கி அழகு பார்த்த அன்னையின் மறைவு என்பது எந்த ஒரு மகனுக்கும் ஈடுசெய்ய இயலாத இழப்பாகும். 'வைகைப் புயல்' வடிவேலுவுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: AR Rahman ஸ்டுடியோவில் பரிதாபம் - 40 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்த மின் உதவி பொறியாளர் பலி!

Last Updated : Jan 19, 2023, 11:16 AM IST

ABOUT THE AUTHOR

...view details