தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலை முன்னிட்டு சுவாமி சங்கரதாஸ் அணியினருக்கு ஆதரவாக மதுரையில் உள்ள நாடக நடிகர் சங்கத்தைச் சேர்ந்தவர்களிடம் நடிகர்கள் உதயா, விமல், ஆர்த்தி கணேஷ் உள்ளிட்டோர் ஆதரவு கேட்டு வருகின்றனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய உதயா, " சுவாமி சங்கரதாஸ் அணி சார்பாகப் போட்டியிடும் தலைவர் பாக்யராஜூக்கு ஆதரவாக மதுரை நாடக சங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்களிடம் ஆதரவு கேட்டு வந்துள்ளோம், தேர்தல் என்பது போட்டிதான். போட்டியிடும் அணியைச் சேர்ந்தவர்கள் அரசியலில் இருக்கலாம், ஆனால் அரசியல் தலையீடு இல்லை.
பாண்டவர் அணி பொய் மட்டுமே பேசி வருகிறது: நடிகர் உதயா - Pandavar
மதுரை: சுவாமி சங்கரதாஸ் அணி வென்றால் சொந்தப் பணத்தில் சங்க கட்டிடம் கட்டுவோம் என்றும் பாண்டவர் அணியினர் பொய் மட்டுமே பேசிவருகின்றனர் என்றும் சங்கரதாஸ் அணியைச் சேர்ந்த நடிகர் உதயா தெரிவித்தார்.

நடிகர் உதயா
நடிகர் உதயா
கருணாஸ் பதவி கேட்டதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது, அதனைத் தேவைப்பட்டால் வெளியிடுவேன். பாண்டவர் அணியினர் பொய் மட்டுமே கூறுகின்றார். கருணாஸ் பதவி கேட்டார். உண்மையாய் உழைப்பவர்களுக்கு மட்டுமே பதவி என்று சொன்னதால் அவர் கோபப்பட்டுப் பேசி வருகிறார்" என்றார்.