தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

2021 சட்டப்பேரவைத் தேர்தலில் 2 தொகுதிகள் கேட்போம்: நடிகர் கருணாஸ் - Karunas about Sasikala

மதுரை: 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் முக்குலத்தோர் புலிப்படை இரு தொகுதிகளில் போட்டியிடும் என நடிகரும் சட்டப்பேரவை உறுப்பினருமான கருணாஸ் தெரிவித்துள்ளார்.

actor_karunas about 2021 Election
actor_karunas about 2021 Election

By

Published : Sep 24, 2020, 7:47 PM IST

தென்மாவட்டங்களில் இரு பிரிவினரிடைய மோதல் ஏற்படும் வகையில் சுவரொட்டிகளை ஒட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவரும் சட்டப்பேரவை உறுப்பினருமான நடிகர் கருணாஸ் தென்மண்டல காவல் துறை தலைவரிடம் புகாரளித்தார்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் கருணாஸ் கூறுகையில், ''விளம்பர நோக்கத்தில் இரு தரப்பினரிடையே பிரச்னைகளை உருவாக்கும் வகையில் சுவரொட்டிகளை ஒட்டுபவர்கள் மீதும், அச்சகங்கள் மீதும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும். வரும் தேர்தலில் எந்த கட்சி ஆட்சியமைக்க வேண்டுமென்றாலும் முக்குலத்தோர் புலிப்படை தவிர்க்க முடியாத அமைப்பாக இருக்கும்.

வரும் தேர்தலில் கூட்டணி அமைக்கும் கட்சியிடம் 2 தொகுதிகள் கேட்போம். அதிமுகவில் உள்ள பிரச்னைகள் தொடர்பாக பல தரப்பு கருத்துகள் பிரதிபலிக்கப்படுகிறது. சசிகலா சிறையிலிருந்து வெளியில் வரும்போது அதிமுகவில் நிச்சயம் சலசலப்பு இருக்கும். அதிமுகவில் சசிகலா இடம்பெறுவது குறித்து கருத்து சொல்ல இயலாது.

நடிகர் கருணாஸ் செய்தியாளர் சந்திப்பு

வேளாண்மையை அழிக்கும் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் மசோதாவிற்கு முக்குலத்தோர் புலிப்படை சார்பாக எதிர்ப்பு தெரிவிக்கிறோம். காவிரி – குண்டாறு இணைப்பு திட்டத்தை தொடங்கிவைத்த முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துகொள்கிறேன்.

ரஜினி ரசிகர்கள் பிறந்ததில் இருந்து போஸ்டர் ஒட்டிவருகிறார்கள். அவர் அரசியலுக்கு வந்தால் தான் கருத்து சொல்லமுடியும். யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சி தொடங்கலாம் என்ற நிலை தமிழ்நாட்டில் மட்டும் தான் உள்ளாது. எந்த கட்சிக்கும் கொடிபிடிக்க ஒரு கூட்டம் உள்ளது'' என்றார்.

இதையும் படிங்க:தற்போதைய பொருளாதார நிலையில் தேசிய கல்விக் கொள்கை பகல் கனவாகவே முடியும்'

ABOUT THE AUTHOR

...view details