தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நடிகர் தனுஷ் மீதான வாரிசு வழக்கு ஒத்தி வைப்பு - மதுரை நடுவர் நீதிமன்றம்

மதுரை: நடிகர் தனுஷ் தனது மகன் என மேலூரை சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதியினர் தொடர்ந்த வழக்கின் விசாரணையை வரும் ஆக. 30ஆம் தேதிக்கு மதுரை மாவட்ட நீதிமன்றம் ஒத்தி வைத்தது.

தனுஷ்

By

Published : Jul 15, 2019, 9:03 PM IST

மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்தவர் கதிரேசன். இவர் நடிகர் தனுஷ் தனது மகன் என உரிமைகோரி வருகிறார். தனுஷிடம் பராமரிப்பு பணம் கேட்டு கதிரேசன் - மீனாட்சி தம்பதி மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் தாக்கல் செய்து விசாரணைக்கு எடுக்கப்பட்ட வழக்கை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.

இந்த வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நடிகர் தனுஷ் சார்பில் போலி ஆவணங்களை தாக்கல் செய்ததாகவும், இதனால் தனுஷ் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க காவல்துறையினருக்கு உத்தரவிடக்கோரி கதிரேசன் சார்பில் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது தனுஷ் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய நீதித்துறை நடுவர் உத்தரவிட்டார். இந்நிலையில் மதுரை ஆறாவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் தனுஷூக்கு எதிரான வழக்கு இன்று (திங்கள் கிழமை) விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி வழக்கினை ஆக.30 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

ABOUT THE AUTHOR

...view details