அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படம், தமிழ்நாடு முழுவதும் நாளை வெளியாக இருக்கும் நிலையில், அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவிலான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்நிலையில், நேர்கொண்ட பார்வை படம் வெளியாவது தொடர்பாக அஜித் ரசிகர்கள் பல்வேறு வாசகங்கள் அடங்கிய சுவாரஸ்யமான சுவரொட்டிகளை மதுரை மாநகரம் முழுவதும் ஒட்டியுள்ளனர்.
அதில் "நாளைய நாடாளுமன்றமே" என்ற வாசகம் அடங்கிய போஸ்டர், மதுரை மாநகரில் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டு நடிகர் அஜித்தை அரசியலுக்கு வரவேற்கும் வகையில் உள்ளது.
நடிகர் அஜித்தை அரசியலுக்கு வரவேற்கும் போஸ்டரால் பரப்பரப்பு! நடிகர் அஜித்தை அரசியலுக்கு வரவேற்கும் வகையில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டது. அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படம் நாளை வெளியாவதையடுத்து மதுரையில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.