தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடிமராமத்துப் பணிகளில் முறைகேடு நடைபெற்றிருந்தால் நடவடிக்கை - அமைச்சர் மூர்த்தி

குடிமராமத்துப் பணிகளில் முறைகேடுகள் நடைபெற்றது தெரியவந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

குடிமராமத்து பணிகளில் முறைகேடு நடைபெற்றிருந்தால் நடவடிக்கை
குடிமராமத்து பணிகளில் முறைகேடு நடைபெற்றிருந்தால் நடவடிக்கை

By

Published : Nov 8, 2021, 7:39 PM IST

மதுரை: நாராயணபுரம் அருகிலுள்ள புளியங்குளம் சின்ன கண்மாய் பகுதியை வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, "வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதால் மாவட்டம் முழுவதும் உள்ள ஏரி, கண்மாய், குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

நீர் செல்ல இயலாமல் உள்ள கண்மாய்களின் வரத்துக் கால்வாய்கள் சீர் அமைக்கப்படுகின்றன. இந்தப் பணியில் மாவட்ட ஆட்சியர், வருவாய்த்துறை அலுவலர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

குடிமராமத்துப் பணிகளில் முறைகேடு நடைபெற்றிருந்தால் நடவடிக்கை

குடிமராமத்துப் பணி

குடிமராமத்துப் பணிகளில் முறைகேடு நடைபெற்றுள்ளதா என்பது குறித்து அந்தத் துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். முறைகேடு நடைபெற்றதாக உறுதி செய்யும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.

கடந்த 10 ஆண்டுகளில் முறையாக ஏரி, குளம், கண்மாய்கள் பராமரிக்கப்படவில்லை.

மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து முக்கியமான ஏரி, குளங்கள், கண்மாய்கள் நிரம்பி உள்ளன. பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள கண்மாய்களில் நீர் நிரப்பும் பணி தற்போது நடைபெற்று வருகிறது" என்றார்.

இதையும் படிங்க:இரண்டாம் நாள் மக்களுடன் ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details