தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வணிகவரித் துறைக்கு இழப்பை ஏற்படுத்தும் அலுவலர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை - அமைச்சர் மூர்த்தி - Madurai News

தமிழ்நாடு அரசுக்கு வணிக வரித்துறையில் வருவாய் இழப்பு ஏற்படுத்தும் விதமாக ஏமாற்றுபவர்களுக்கு துணையாக போகும் வணிக வரித்துறை அலுவலர்கள் யாராகினும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்

மதுரையில் சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்து பேசினார்
வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி

By

Published : Oct 24, 2021, 6:45 AM IST

மதுரை:மதுரை கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட காதக்கிணறு ஆர். சி பள்ளி வளாகத்தில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாமை வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி தொடங்கிவைத்தார்.

அப்போது மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், சோழவந்தான் சட்டப்பேரவை உறுப்பினர் வெங்கடேசன் ஆகியோர் உடனிருந்தனர்.

அப்போது, அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்களிடம் கூறுகையில்,

“கடந்த ஆட்சி காலத்தில் மதுரை மாவட்டத்திற்கு வந்த நிதியில் 90 சதவீதம் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தொகுதியில் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது, திமுக ஆட்சி காலத்தில் யாருக்கும் எந்தப் பாரபட்சமுமின்றி அனைத்து தொகுதிக்கும் சமமாக திட்டங்களை ஒதுக்கீடு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளன,

காலிப்பணியிடங்களை நிரப்பத் திட்டம்

குறிப்பாக, வணிக வரித்துறையை ஏமாற்றுவேலைகள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. அதற்காக ஏமாற்றுபவர்களைக் கண்டுபிடிப்பதற்கு புதிய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அது, வணிகவரித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், வணிகவரித் துறையில் உள்ள ஆள்கள் பற்றாக்குறையைப் போக்கும் வகையில் 1000 அலுவலர்களுக்கு பதவி உயர்வு வழங்க உள்ளோம்; அடுத்ததாக, வணிக வரித்துறைக்கு 100 வாகனங்களும் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.

வணிக வரித்துறையில் தவறு செய்யும் அலுவலர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அரசுக்கு வரும் வருவாயை ஏமாற்றுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

இதையும் படிங்க: தாடையை அழகாக மாற்ற சில எளிய பயிற்சிகள்

ABOUT THE AUTHOR

...view details