மதுரைரயில்வே கோட்டத்தில் தூத்துக்குடியில் இருந்து உரம், நிலக்கரி, சுண்ணாம்புக்கல் ஆகியவையும் வாடிப்பட்டியில் இருந்து டிராக்டர்களும் சரக்கு ரயில் மூலம் வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.
இந்த சரக்கு போக்குவரத்து வாயிலாக மதுரை கோட்டம் கடந்த ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் வரை ரூபாய் 170 கோடி வருமானம் ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் சரக்கு போக்குவரத்து வருமானம் ரூபாய் 128.44 கோடியாக இருந்தது. இதன் மூலம் கடந்த ஆறு மாத கால சரக்கு போக்குவரத்து வருமானம் 32.38 சதவீதம் உயர்ந்துள்ளது.