தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாத்தான்குளம் விவகாரம்: குற்றஞ்சாட்டப்பட்ட காவலர்கள் இன்று ஆஜர் - சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு

மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட காவலர்கள் விசாரணைக்காக மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்.

சாத்தான்குளம்
சாத்தான்குளம்

By

Published : Dec 10, 2020, 2:04 PM IST

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தந்தை, மகன் இருவரும் கொலைசெய்யப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 9 பேரும் இன்று (டிச.10) மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். கடந்த நவம்பர் 11ஆம் தேதி விசாரணை நடைபெற்ற நிலையில் இன்று அடுத்தகட்ட விசாரணை நடைபெற உள்ளது.

சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் ரகு, கணேஷ், பாலகிருஷ்ணன், தலைமை காவலர்கள் முருகன், முத்துராஜா, தாமஸ், பிரான்சிஸ், காவலர்கள் சாமத்துரை, வெயில்முத்து, செல்லத்துரை ஆகிய ஒன்பது பேரும் பலத்த பாதுகாப்போடு மதுரை மாவட்ட நீதிமன்ற நீதிபதி வடிவேல் முன்பு இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்.

குற்றஞ்சாட்டப்பட்ட காவலர்கள் இன்று ஆஜர்

இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் சிறையில் தங்களை சுதந்திரமாக இருக்கவிட மறுப்பதாகச் சென்ற விசாரணையின்போது நீதிபதியிடம் புகார் தெரிவித்திருந்தார். மேலும் அன்றைய தினம் எட்டு பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை நகல் அனைவருக்கும் வழங்கப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details