தமிழ்நாட்டில் பட்டியலின ஊராட்சி மன்ற தலைவர்களை அவமதிக்கும் செயல்கள் கடந்த சில நாள்களாக அதிகமாக நடந்து வருகின்றன. திருவள்ளூர் மாவட்டம் ஆத்துப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் அமிர்தம், தேசிய கொடியேற்ற விடாமல் அவமதிக்கப்பட்டார். இதனிடையே கடலூர் மாவட்டம் தெற்குத்திட்டை ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி பொதுக்கூட்டத்தின்போது தரையில் அமர்த்தப்பட்டார்.
மயிலாடுதுறையில் ஊராட்சி மன்ற தலைவர் பிரியா பெரியசாமி சுழல் நாற்காலியில் அமர்வதற்கு கடும் சர்ச்சைகள் எழுந்தன. இந்நிலையில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ள நாடார்மங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் கணேஷை துணைத் தலைவர் பிரதீப் என்பவர் கடத்திச் சென்றதாக புகார் எழுந்துள்ளது.