தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பால் கெட்டுப் போன விவகாரம் - 2 பேரை பணியிடை நீக்கம் செய்த ஆவின் - ஆவின் நிர்வாகம்

விநியோகம் செய்யப்பட்ட ஆவின் பால் பாக்கெட்டுகள் கெட்டுப் போன விவகாரத்தில் இதுவரை இரண்டுபேரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து ஆவின் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பால் கெட்டுப் போன விவகாரம் - 2 பேரை பணியிடை நீக்கம் செய்த ஆவின்
பால் கெட்டுப் போன விவகாரம் - 2 பேரை பணியிடை நீக்கம் செய்த ஆவின்

By

Published : Aug 3, 2021, 5:30 AM IST

மதுரை:மதுரையில் உள்ள கேகே நகர் ஆவின் நிறுவனத்தில் இருந்து விநியோகிக்கப்பட்ட பால் பாக்கெட்டுகள் கெட்டுப் போவதாக நுகர்வோர் தரப்பிலிருந்து புகார் எழுந்தது. ஆவின் பால் தொழிற்சாலையில் சிறிய அளவிலான குளிர்விப்பான் சிறிதுநேரம் பழுதானதால் இந்த தவறு ஏற்பட்டதாகவும், தற்போது அது சீரமைக்கப்பட்டுள்ளதாகவும் ஆவின் நிர்வாகம் விளக்கமளித்திருந்தது. மேலும், இந்த தொழில்நுட்ப கோளாறால் 2 ஆயிரம் லிட்டர் பால் வீணாகியுள்ளதாகவும் ஆவின் நிர்வாகம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், ஆவின் நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "மதுரை மாவட்ட கூட்டுறவுப் பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் மூலமாக கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி உள்ளூர் விற்பனைக்கு அனுப்பப்பட்ட பால் கெட்டுப் போனது தொடர்பாக முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டது.

அதனடிப்படையில், 2 அலுவலர்கள் தற்காலிக பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், இது தொடர்பாக துணைப் பொதுமேலாளர் தலைமையில் அலுவலர் குழு அமைக்கப்பட்டு விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:ஆவின் ஊழல் - நேர்மையான அலுவலர்கள் மீது நடவடிக்கை?

ABOUT THE AUTHOR

...view details