மதுரையில் ஆவின் கண்காணிப்பாளராக பணியாற்றியவர் முத்துநாயகம். இவர் மஸ்தூராகப் பணிபுரிந்த உமாதேவி என்பவரை தன்னிச்சையாக காசாளராக நியமித்தார். இவர்கள் இருவரும் சேர்ந்து வாடிக்கையாளர்களிடம் ஆவினில் பால் வாங்க அட்டை வழங்குவதற்காக, வசூல் செய்த பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக கையாடல் செய்து வந்தனர்.
2003ஆம் ஆண்டு நவம்பரில் பால் அட்டை விற்ற பணத்தை கணக்கு பார்த்த போது, இருவரும் சேர்ந்து ரூ.1.35 லட்சத்தை கையாடல் செய்திருப்பது தெரியவந்தது. இதுபற்றி ஆவின் அலுவலர்கள் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர்.