ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு மாநிலம் முழுவதும் உள்ள கோயில்களில் பக்தர்கள் காலை முதலே வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். இந்துக்களின் சிறப்புமிக்க தினங்களில் ஒன்றான இந்த நாளில் பெரும்பாலனோர் விரதம் இருந்து வழிபாடு நடத்துவது வழக்கம்.
'ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு கோயில்களில் குவிந்த பக்தர்கள்' - ஆடிக்கிருத்திகை
மதுரை: ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு முருகபெருமானின் அறுபடை வீடுகள் உட்பட அனைத்து கோயில்களிலும் பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
விசேஷமான தினம்
அந்த வகையில் மதுரையில் அமைந்துள்ள அழகர்கோவில் மலையில், ஆறாம் படைவீடான பழமுதிர்சோலை முருகன் திருக்கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதமிருந்து பக்தி பரவசத்துடன் அரோகரா கோஷத்துடன் வழிபாடு செய்தனர். இதேபோல் சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் இருந்து 100-க்கும் மேற்பட்ட
பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இங்கு மதுரை, திண்டுக்கல் உட்பட சுற்றுப்பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்து முருகனை வழிபட்டனர்.