மதுரை:உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பன்னிரண்டு மாதமும் விழாக்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் ஆடி மாதம் நடைபெறும் முளைக்கொட்டு உற்சவம் விழா வருகிற ஜூலை 29 ஆம் தேதி இரவு வாஸ்து சாந்தியுடன் தொடங்கி மறுநாள் ஜுலை 30 ஆம் மீனாட்சி அம்மன் சன்னதியில் உள்ள கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் திருவிழா 10 நாட்கள் நடைபெறும்.
உற்சவ நாட்களில் மீனாட்சி அம்மன் பஞ்ச மூர்த்திகளுடன் காலை, மாலை ஆகிய இருவேளை ஆடி வீதியில் சிறப்பு நாதஸ்வர கலைஞர்கள், தவில் வித்வான் சிறப்பு நாதஸ்வர இன்னிசையுடன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திரு உலா காண்பார்.
"ஆடிப்பட்டம் தேடி விதை" என்ற முன்னோர்களின் வாக்கின்படி, ஆடி மாதம் விதை விதைத்து நாற்று நட்டு விவசாய பணிகளை மேற்கொள்ளவும், தங்கள் நிலங்களில் பயிர் விளைச்சல் அதிகரிக்க வேண்டியும் இறைவனை வழிபாடு செய்வது வழக்கம்.
ஆடி முளைக்கொட்டு விழா, நவராத்திரி உற்சவம், ஐப்பசி பூரம், மார்கழி திருவிழா போன்றவை மீனாட்சி அம்மனுக்கு தனியாக நடத்தப்படும் திருவிழா என்பதால் உற்சவர் அம்மன் தனியாக அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
இதையும் படிங்க:மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பாதுகாப்புப்பணியில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வாய்ப்பு!