கரோனா காரணமாக பிறப்பித்த ஊரடங்கில் தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இன்று முதல் குறிப்பிட்ட நான்கு மாவட்டங்கள் தவிர பிற மாவட்டங்களில் பேருந்து சேவை தொடங்கப்பட்டது. இந்நிலையில் மதுரை எம்ஜிஆர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து சேவை இன்று காலை தொடங்கியது. அதில் முகக்கவசத்துடன் ஏறிய பெண் ஒருவர் சக பயணிகளின் கவனத்தை ஈர்த்தார்.
அவர் தனக்கு அருகில் பெரிய கரடி பொம்மையை அமர வைத்து பயணித்ததே கவன ஈர்ப்புக்கு காரணம். குழந்தைகள்தான் கையில் எப்போதும் பொம்மையை ஏந்தியபடி இருப்பார்கள். ’என்னடா! இது வயசு பொண்னு பொம்மையை தூக்கிட்டு வந்திருக்கா?’ என சக பயணிகள் கிசுகிசுக்க, அந்த பெண்ணோ அலட்டிக்கொள்ளாமல் அமர்ந்திருந்தார்.