தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவலர் தேர்வில் வெற்றிபெற்றும் பணிக்கு செல்ல முடியாத இளைஞர்

மதுரை: காவல் நிலையத்தில் முறையாக வழக்கை முடிக்காததால் காவலர் தேர்வில் வெற்றிபெற்றும் வேலையில் சேரமுடியவில்லை எனக்கூறி இளைஞர் ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம் தனது அனைத்து சான்றிதழ்களையும் அளித்துள்ளார்.

வழக்கை முடிக்காமல் இழுத்தடித்ததால் வாழ்க்கையை இழந்து விட்டதாக இளைஞர் வேதனை

By

Published : Nov 19, 2019, 12:06 AM IST

மதுரை பேரையூர் பகுதியைச் சேர்ந்த சங்கரமணி என்பவர் பட்டியல் இனத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர். இவர், 2012ஆம் ஆண்டு நடைபெற்ற காவலர் உடற்தகுதித் தேர்வில் தேர்வு எழுதினார். தேர்வில் வெற்றி பெற்றும் அவர் மீது இரண்டு வழக்குகள் நிலுவையில் இருந்ததாகக் கூறி பணி ஆணையை காவலர் தேர்வாணையம் நிராகரித்துவிட்டது.

இதனால் வாழ்க்கையை இழந்த இளைஞர் சான்றிதழ்கள் அனைத்தையும் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துவிட்டு தனக்கு உதவுமாறு கோரிக்கை விடுத்துச்சென்றார்.

இதுகுறித்து இளைஞர் செய்தியாளர்களிடம் கூறும்போது, 'நான் 12ஆம் வகுப்பு படிக்கும்போது போடப்பட்ட பொய் வழக்கு இரண்டை காவல்துறையினர் சரியாக பதிவு செய்யவில்லை. இதனால் தற்போது நான் காவலர் தேர்வில் வெற்றிபெற்றும் வேலையில் சேரமுடியவில்லை' என்றார்.

சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியரிடம் அளித்த இளைஞர் சங்கரமணி

மேலும், 'வழக்கு குறித்து காவல் நிலையத்தில் விசாரித்தபோது வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் இட மாற்றம் செய்துவிட்டனர் எனக் காவலர்கள் தெரிவித்துவிட்டனர்' என அவர் வருத்தத்தோடு தெரிவித்தார்.

இதையும் படிங்க: காவலர் பணிக்கான தகுதி தேர்வில் பரிதாபம்- மூர்ச்சையாகி இளைஞர் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details