தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"நான் பெண்ணாகத்தான் பிறந்தேன்; ஆணாக வாழ விடுங்கள்!" - ஆணை போன்று உள்ளது

பெண்ணாக பிறந்திருந்தாலும் தனது தன்மை நடவடிக்கை எல்லாம் ஒரு ஆணைப் போன்று உள்ளதால், தான் ஆணாக வாழ்வதற்கு சட்டபூர்வமாக அனுமதிக்கக் கோரி லாவண்யா என்ற பெண், மதுரை மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்துள்ளார்.

"நான் பெண்ணைத் தான் பிறந்தேன்" - ஆணாக வாழ விடுங்கள்!

By

Published : Jul 9, 2019, 5:00 PM IST


மதுரையைச் சேர்ந்த லாவண்யா என்ற பெண், தனது நடவடிக்கைகள் எல்லாம் ஒரு ஆண் போலவே உள்ளது என்றுகூறி, ஆணாக வாழ்வதற்கு சட்டபூர்வமாக அனுமதிக்கக் கோரி இன்று மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

"நான் பெண்ணைத் தான் பிறந்தேன்" - ஆணாக வாழ விடுங்கள்!

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், "நான் பெண்ணாகத்தான் பிறந்தேன், ஆனால் வளரும்போது ஆண் தன்மையோடுதான் வளர்ந்தேன். எனக்குள் ஏற்பட்ட இந்த மாற்றங்கள் குறித்து எனது பெற்றோரிடம் கூறினாலும், அவர்கள் அதை ஏற்றுக் கொள்வதாக இல்லை. மேலும் என்னை பெண்ணாகவே வாழ வற்புறுத்துகின்றனர். அதுமட்டுமின்றி வீட்டிற்குள் அடைத்து வைத்து சித்ரவதை செய்தனர். ஆகையால் நேற்று எனது வீட்டிலிருந்து வெளியேறி பாரதி கண்ணம்மா அறக்கட்டளையில் வந்து தஞ்சமடைந்தேன். அப்போது அங்கிருந்த திருநங்கை பாரதி கண்ணம்மா எனக்கு முழு ஆதரவு கொடுத்தார். இருந்தபோதிலும் என்னுடைய இந்த மாற்றத்திற்கு சட்டப்பூர்வ அனுமதி வேண்டும் என்று கோரி மதுரை மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்திருக்கிறேன்" என்று கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details