மதுரை எல்லீஸ் நகர்ப் பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் மணமக்கள் வாசுதேவன் - ஜோதிபிரியா இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு ஏராளமான உறவினர்கள் வருகை தந்து மணமக்களை வாழ்த்தினர்.
இருவீட்டாரின் சார்பிலும் திருமணத்திற்கு வருகை தரும் உறவினர்களில் ஒருவருக்கு குலுக்கல் முறையில் 70 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள இருசக்கர வாகனம் வழங்கப்படும் என திருமண அழைப்பிதழிலேயே அச்சடித்து அசத்தி இருந்தனர். இதனடிப்படையில் இன்று (ஜூன் 09) திருமணத்திற்கு வருகை தந்த அனைவரின் பெயர்களையும் எழுதி டோக்கன் கொடுத்தனர்.