மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகேவுள்ள மேல உரப்பனூர் கிராமத்தில் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இக்கிராமத்தின் ஊர் எல்லையில் எல்லையம்மன் கோயில் உள்ளது. ஊரிலிருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் இந்த கோயில் அமைந்துள்ளது.
இக்கோயிலில் ஆண்டுக்கு ஒரு முறை ஐப்பசி மாதம் அமாவாசை அன்று எல்லையம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டு, அசைவ விருந்து படைத்து, சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும்விதமாக அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்த ஆண்கள் மட்டுமே பங்கேற்பது வழக்கம்.
ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் அசைவ விருந்து அதேபோல், இந்த ஆண்டு எல்லையம்மன் கோயிலில் ஐப்பசி மாதம் அமாவாசை பொங்கல் திருவிழா கடந்த மாதம் நடைபெற்றது. அன்றைய தினம் தேவர் ஜெயந்தி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றதால் கார்த்திகை மாதம் அமாவாசையான இன்று (நவ.23) எல்லையம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டு அசைவ விருந்து படைக்கப்பட்டது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்து கொண்டு கறி உணவை உண்டு சென்றனர்.
இதையும் படிங்க:மக்காச்சோளப் பயிரில் படைப்புழுக்கள் தாக்குதல் - விவசாயிகள் வேதனை