தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருமண விருந்திற்குச் சென்ற புதுமாப்பிள்ளை மர்ம மரணம் - சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவு - சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட மர்ம மரண வழக்கு

கன்னியாகுமரி மாவட்டத்தில், திருமண விருந்திற்கு சென்ற புது மாப்பிள்ளை ஜெகதீஷ் மர்மமாக மரணம் அடைந்த வழக்கை சிபிசிஐடி காவல் துறைக்கு விசாரணை நடத்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

திருமண விருந்திற்குச் சென்ற புதுமாப்பிள்ளை மர்ம மரணம் : சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவு
திருமண விருந்திற்குச் சென்ற புதுமாப்பிள்ளை மர்ம மரணம் : சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவு

By

Published : Dec 19, 2021, 1:58 PM IST

மதுரை:கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள கிழக்கே விளைப் பகுதியைச் சேர்ந்த கிறிஸ்டோபர் சுதா என்பவர் உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ”என் சகோதரர் ஜெகதீஸ் என்பவருக்கும் பாண்டிவிளைப் பகுதியைச் சேர்ந்த சரண்யா என்பவருக்கும் கடந்த ஜூன் 21ஆம் தேதி அன்று திருமணம் நடந்ததாகவும்.

சரண்யாவுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து அவரது கணவர் தற்கொலை செய்துகொண்டார். இதை அறிந்தே, சரண்யாவை திருமணம் செய்ய ஜெகதீஸ் முடிவு செய்திருந்தார்.

இந்த நிலையில் திருமணம் முடிந்த பிறகு ஜெகதீஷ் ,சரண்யா தம்பதியினர் சரண்யாவின் உறவினர்கள் வீட்டில் விருந்துக்கு சென்றிருந்தனர். அன்று(ஜூலை 16) சரண்யாவின் சித்தப்பா வீட்டில் உணவு அருந்தி விட்டு வந்தனர்.

திடீர் மரணம்

அதன் பிறகு ஜெகதீஸ் சுயநினைவின்றி இருப்பதாக, ஜெகதீசன் உறவினர்களுக்கு சரண்யா போன் செய்திருந்தார்.மருத்துவமனையில் அனுமதிக்க வில்லை.அதன் பிறகு அவர் தற்போது நல்ல நிலையில் உள்ளார் என்றும் சரண்யா தெரிவித்து உள்ளார்.

இந்த நிலையில் ஜெகதீஸ் உயிரிழந்து விட்டதாக அவரது உறவினர்களுக்கு சரண்யா தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து ஜெகதீஸ் உடல் , தக்கலை அரசு மருத்துமனை எடுத்து செல்லப்பட்டு அங்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது .இது குறித்து தக்கலைகாவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

மேலும் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவரது உடலில் காயங்கள் அதிகம் உள்ளது என்று தெரியவந்துள்ளது. ஜெகதீஸ் மரணத்தில் மர்மம் உள்ளது . எனவே ஜெகதீஸ் மர்ம மரணத்திற்கான காரணத்தைக் கண்டுபிடிக்க வேண்டும் ”என்று மனுவில் கூறி இருந்தார்.


இந்த மனு நீதிபதி ஜீ.ஆர். சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, திருமண விருந்திற்கு சென்ற புது மாப்பிள்ளை ஜெகதீஷ் மரணம் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு உத்தரவிட்டார் .

இதையும் படிங்க:பிபின் ராவத் உள்ளிட்டோரை மீட்ட தீயணைப்புத் துறையினரின் துயரம் - செவிசாய்க்குமா அரசு?

ABOUT THE AUTHOR

...view details