மதுரை:முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி, தொடர்ந்து தனது ஆதரவாளர்களின் இல்ல விழாக்களில் பங்கேற்று வருகிறார்.
அதன் தொடர்ச்சியாக மதுரை தெற்கு வாசல் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற மு.க.அழகிரியின் ஆதரவாளர் ஜாஹீரின் இல்ல வளைகாப்பு விழாவில் மு.க.அழகிரி, தனது மனைவி காந்தி அழகிரியுடன் பங்கேற்றார்.