தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனாவால் பைக் திருடனாக மாறிய பாதிரியார்! - Madurai District News

மதுரை: மோட்டார் இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்ட பாதிரியாரை மடக்கிப் பிடித்த காவல் துறை, அவரிடமிருந்து 11 இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட பாதிரியார்
கைது செய்யப்பட்ட பாதிரியார்

By

Published : Jun 14, 2020, 11:15 PM IST

மதுரை, தனக்கன்குளம் அருகேயுள்ள பர்மா காலனிப் பகுதியைச் சேர்ந்தவர் விஜயன் (எ) சாமுவேல். இவர் அதே பகுதியில் கிறிஸ்துவ பில்டர்ஸ் அசெம்ப்ளி என்ற அமைப்பை நடத்தி, போதனைகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் கரோனா ஊரடங்கு காரணமாக, கடந்த சில நாட்களாக போதிய வருமானம் இல்லாத நிலையில் அருகில் இருந்த வீடுகளில் நிறுத்தப்பட்டிருந்த ஸ்கூட்டி, இரு சக்கர வாகனங்களைத் திருடி விற்பனை செய்து வந்துள்ளார், பாதிரியார் சாமுவேல்.

பைக் திருட்டில் ஈடுபட்ட பாதிரியார் கைது
இந்நிலையில் திருடிய மோட்டார் இருசக்கர வாகனம், ஒன்றை மெக்கானிக் கடையில் கொடுத்தபோது, விவரங்கள் குறித்து முரண்பாடாக பதில் அளித்திருக்கிறார், சாமுவேல்.
இதனால் மெக்கானிக் தரப்பில் இருந்து காவல் துறைக்கு அளித்தப் புகாரின் அடிப்படையில், விசாரணை நடத்தினர். விசாரணையில் இரு சக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்டதை ஒப்புகொண்டுள்ளார், பாதிரியார் சாமுவேல்.

மேலும் தகவலின் அடிப்படையில் அவரிடமிருந்து 11 மோட்டார் இருசக்கர வாகனங்களை சுப்பிரமணியபுரம் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

கரோனா ஊரடங்கால் ஏற்பட்ட வருமானக்குறைவால், பாதிரியார் பைக் திருடராக மாறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:லிஃப்ட் கேட்பதுபோல் நடித்து வழிப்பறியில் ஈடுபட்ட திருநங்கைகள் கைது

ABOUT THE AUTHOR

...view details