தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பணத்தை கையாடல் செய்த தபால் நிலைய ஊழியர் - post office worker

மதுரை: வாடிக்கையாளரின் சிறு சேமிப்பு கணக்கில் இருந்து ரூ.4.22 லட்சம் கையாடல் செய்த தபால் நிலைய ஊழியர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பணத்தை கையடால் செய்த தபால் நிலைய ஊழியர்

By

Published : Jul 5, 2019, 12:54 PM IST

மதுரை எஸ்.ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்செல்வன். இவர் விளக்குத்தூண் பகுதியில் உள்ள தபால் அலுவலகத்தில் தபால் உதவியாளராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் வாடிக்கையாளரிடமிருந்து சிறுசேமிப்பு தொகையாக பெற்ற சுமார் ரூ.17.29 லட்சம் பணத்தில், ரூ.13.06 லட்சத்தை மட்டும் வரவு வைத்துவிட்டு, மீதமுள்ள ரூ.4.22 லட்சத்தை கையாடல் செய்ததாக மதுரை மண்டல துணை கண்காணிப்பாளர் வேதராஜன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details