தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பட்டப்பகலில் வீட்டு வாசலில் கொலை முயற்சி - மதுரையில் பரபரப்பு! - murder

மதுரை: மதுரை மாவட்டம் சொக்கிகுளம் பகுதியில் பட்டப்பகலில் வீட்டு வாசலில் கொலை முயற்சி நிகழ்ந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை கொலை முயற்சி

By

Published : May 1, 2019, 8:53 PM IST

மதுரை சொக்கிகுளம் பகுதியை சேர்ந்தவர் பாலநமச்சிவாயம். இன்று மதியம் வீட்டில் இருந்த அவரை, 4 பேர் கொண்ட மர்ம கும்பல் ஆயுதங்களால் சரமாரியாக தாக்கி கொலை செய்ய முயற்சித்துள்ளது.

உயிருக்கு போராடி கொண்டிருந்த அவரை மீட்டு மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அக்கம் பக்கத்தினர் அனுப்பி வைத்தனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் ரஜினி மன்றத்தின் செயலாளராக பாலநமச்சிவாயம் இருந்தார். அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமர்த்தப்பட்டதை அடுத்து, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டார். மேலும், அவர் மீது பல மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து தல்லாகுளம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை கொலை முயற்சி

ABOUT THE AUTHOR

...view details