மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நேற்று (ஜன.16) நடைபெற்ற ஜல்லிக்கட்டின் போது, அலங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த நவமணி (24). இவர், தனது நண்பரின் காளையை போட்டிக்கு அழைத்துவந்தார்.
அப்போது, எதிர்பாராத விதமாக மாடு குத்தியதில் அவர் படுகாயமடைந்தார். இதையடுத்து, ஜல்லிக்கட்டு மைதானத்தில் அமைந்திருந்த முதலுதவி முகாமில் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது.