தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

லாட்டரி சீட்டுகளை டோர் டெலிவரி செய்ய நபர் கைது! - லாட்டரி சீட்டு

மதுரை: அலங்காநல்லூர் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை, செல்ஃபோன் மூலம் டோர் டெலிவரி செய்து விற்பனை செய்த நபரை காவல் துறையினர் கைது செய்தனர்.

டோர் டெலிவரி செய்யப்படும் லாட்டரி சீட்டுகள்
டோர் டெலிவரி செய்யப்படும் லாட்டரி சீட்டுகள்

By

Published : Nov 7, 2020, 10:55 AM IST

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பகுதிகளில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட கேரளா மாநில லாட்டரி சீட்டுகள், டோர் டெலிவரி மூலம் விற்பனை செய்யப்படுவதாக அலங்காநல்லூர் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, லாட்டரி சீட்டு விற்பனை செய்பவர்களை பிடிப்பதற்காக லாட்டரி சீட்டு வாங்குவது போல் நடித்த காவல் துறையினர், லாட்டரி சீட்டு விற்பனை செய்பவரை செல் ஃபோனில் அழைத்து அலங்காநல்லூர் பேருந்து நிலையத்திற்கு வரச் சொல்லி காத்திருந்தனர்.

அப்போது அங்கு வந்த முதியவர் ஒருவர், தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி சீட்டுகளை காவல் துறையினரிடமே விற்பனை செய்துள்ளார். உடனடியாக, லாட்டரி சீட்டுகளை விற்ற நபரை, கையும் களவுமாக காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர், பெரிய ஊர்சேரி பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பது தெரியவந்தது. அவரிடமிருந்து கட்டுக் கட்டாக லாட்டரி சீட்டுகள், இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், இச்சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: பள்ளி சிறுமிக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பிய நபர் கைது!

ABOUT THE AUTHOR

...view details