மதுரை: அண்மை காலமாக பல்வேறு குடும்பங்களில் தங்களின் திருமண வயது உள்ள பையன்களுக்கு பெண்கள் கிடைப்பது மிகவும் அரிதாகி வரும் நிலையில், 90களில் பிறந்த ஆண்களுக்கு அது மிகப்பெரிய சவாலாகவே உள்ளது. இதனை கிண்டல் செய்து பல்வேறு வகையான பதிவுகள் சமூக வலைதளங்களில் வலம் வருகின்றன.
அரசியல், சினிமா, ஆன்மிகம் என மதுரையின் தெருக்களில் ஒட்டப்படும் சுவரொட்டிகளில் தமிழகம் முழுவதும் பல்வேறு வகையான சர்ச்சைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், மதுரை மாநகரை சேர்ந்த 90களில் பிறந்த இளைஞர் ஒருவர் தனக்கு மணப்பெண் தேவை என்று சுவரொட்டி அடித்து, நட்சத்திரம், ராசி, வாங்கும் சம்பளம் என முழு விவரங்களையும் அச்சடித்து தெரு முழுவதும் ஒட்டி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.