மதுரை மாவட்டம், செல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அபிநயா என்ற பெண்ணுக்கும் திருமணமான நிலையில், இவர்களுக்கு மூன்று வயதில் சிவனேஸ் என்ற ஒரு ஆண் குழந்தையும், இரண்டு வயதில் ரித்திகா என்ற பெண் குழந்தையும் உள்ளனர்.
அப்பகுதியில் போட்டோ ஸ்டுடியோ நடத்தி வந்த ஜெயச்சந்திரன் பல்வேறு நபர்களிடம் ஐந்து லட்ச ரூபாய் அளவிற்கு கடன் வாங்கி இருந்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று (டிச.07) வழக்கம்போல் தம்பதியரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அபிநயா கோபித்துக்கொண்டு வீட்டில் இருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த ஜெயச்சந்திரன் தன்னுடைய இரண்டு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்துவிட்டு தானும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.