மதுரை:திருவனந்தபுரம் கோட்டத்தில் திருநெல்வேலி - செங்குளம் ரயில் நிலையங்களுக்கிடையே இரட்டை ரயில் பாதை இணைப்புப் பணிகளும், வடக்கு பனகுடி ரயில் நிலையத்தில் நடைமேம்பால வேலைகளும் நடைபெற இருக்கின்றன. இதனால் இந்தப்பகுதியில் ரயில் போக்குவரத்தில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி ஜூலை 20ஆம் தேதி அன்று தாம்பரத்தில் இருந்து புறப்பட வேண்டிய தாம்பரம் - நாகர்கோவில் வாரம் மும்முறை சேவை விரைவு ரயில் (22657) மற்றும் தாம்பரம் - நாகர்கோவில் அந்தியோதயா ரயில் (20691) ஆகியவை திருநெல்வேலி - நாகர்கோவில் ரயில் நிலையங்கள் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
மறு மார்க்கத்தில் ஜூலை 21ஆம் தேதி அன்று நாகர்கோவிலில் இருந்து புறப்பட வேண்டிய நாகர்கோவில் - தாம்பரம் வாரம் மும்முறை சேவை விரைவு ரயில் (22658) மற்றும் நாகர்கோவில் - தாம்பரம் அந்தியோதயா ரயில் (20692) ஆகியவை நாகர்கோவில் - திருநெல்வேலி ரயில் நிலையங்கள் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
ஜூலை 21ஆம் தேதி மற்றும் 24ஆம் தேதி ஆகிய இரு நாட்களில் திருச்சி - திருவனந்தபுரம் - திருச்சி (22627/22628) இன்டர்சிட்டி ரயில்கள் திருநெல்வேலி - திருவனந்தபுரம் ரயில் நிலையங்கள் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:3டி தொழில் நுட்பத்தை பயன்படுத்தி அதிகளவில் ராக்கெட் உற்பத்தி செய்ய திட்டம்: காமகோடி வீழிநாதன்