தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் மேலும் 86 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு - சுகாதாரத்துறைச் செயலாளர் அறிவிப்பு! - Tamil Nadu health secretary

TN corona cases update
TN corona cases update

By

Published : Apr 5, 2020, 6:00 PM IST

Updated : Apr 5, 2020, 8:44 PM IST

17:45 April 05

சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 86 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 571 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னை டி.எம்.எஸ்., வளாகத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தமிழ்நாட்டில் 90,824 பேர் வீட்டுக் காவலில் உள்ளனர். அவர்களில் 127 பேர் அரசு கண்காணிப்பில் உள்ளனர். இதில் 10 ஆயிரத்து 814 பேர், 28 நாள் கண்காணிப்பிலிருந்து தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர். 

இதில் இன்று மட்டும் 86 பேருக்குப் புதிதாக கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அதில் 85 பேர் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள். மொத்தமாக, தமிழ்நாட்டில் 571 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்றார்.

மேலும், “1,848 பேர்  மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதுவரை 8 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். தற்போதுவரை தமிழ்நாடு இரண்டாவது நிலையில் தான் உள்ளது. மூன்றாவது நிலைக்குச் செல்லவில்லை. சென்னையைச் சேர்ந்தவர் உயிரிழந்த விவகாரத்தில், அவர் கரோனா தொற்றால் தான் உயிரிழந்தார் என்பது அவரின் குடும்பத்தினருக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. அதில் அலட்சியம் ஏதும் இல்லை” என்றார்.

இதையும் படிங்க...ஊரடங்கு உத்தரவு: இந்த பொன்னான வாய்ப்பை முறையாக பயன்படுத்துங்கள் - ஏடிஜிபி

Last Updated : Apr 5, 2020, 8:44 PM IST

ABOUT THE AUTHOR

...view details