திருச்சி: திருச்சி மாவட்டத்தை சேர்ந்த சண்முகம் - பார்வதி தம்பதிக்குு 4ஆண் குழந்தைகள், 2 பெண் குழந்தைகள். ஜோசிய தொழிலில் ஈடுபட்டுவந்த நிலையில் கடந்த 2013-ஆம் ஆண்டு தொழில் நிமித்தமாக மதுரைக்கு வந்து சாலையோரங்களில் தங்கியிருந்துள்ளனர்.
அப்போது மதுரை ரயில் நிலையம் அருகே சண்முகம் - பார்வதி தம்பதியின் கடைசி இரு குழந்தைகளான 7 வயது நிரம்பிய பெண் குழந்தையும், இரண்டு வயது ஆண் குழந்தையும் தனியாக நின்றுகொண்டிருந்தபோது, அவவழியாக சென்ற ஒருவஙர் குழந்தைகள் இருவரையும் மீட்டு குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைத்தார்.
இதனிடையே குழந்தைகளை சண்முகம் தம்பதி தேடி வந்த நிலையில் இருவரும் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளனர். அப்போது தனது உறவினரான குமார் என்பவரிடம் தங்களது குழந்தைகள், குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது குறித்து தந்தை சண்முகம் கூறியுள்ளார்.
இதனையடுத்து உறவினரான குமார் மதுரை மாவட்ட குழந்தைகள் நலக்குழுவினரிடம் முறையிட்டுள்ளார். இதை தொடர்ந்து, இரு சிறுவர்களின் பெயர் விவரங்களின் அடிப்படையில் 2 வயதாக இருந்த சிறுவன் குழந்தைகள் நலக்குழுவினர் மூலமாக மதுரை மாவட்டத்தில் உள்ள பல்வேறு காப்பகங்களுக்கு அனுப்பட்டு பாதுகாப்புடன் இருந்துள்ளார்.