மதுரை ஆவின் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் நாணயச் சங்கத்தில். உறுப்பினர்கள் வைப்பு தொகை ரூபாய் 7 கோடியே 92 லட்சம் ரூபாய் கையாடல் செய்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
மதுரை ஆவின் கூட்டுறவு சங்கத்தில் ரூ.7 கோடி மோசடி - இருவர் கைது - மதுரை செய்திகள்
மதுரை: ஆவின் கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.7 கோடி மோசடி செய்யப்பட்ட விவகாரத்தில், அச்சங்க செயலாளர், கணக்காளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பல ஆண்டுகளாக பரபரப்பாக பேசப்பட்ட இச்சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், சங்கத்தின் செயலாளர் மதலையப்பன், சங்கத்தின் கணக்காளர் ஜெகதீஸ்வரன் ஆகியோரை மதுரை வணிகக் குற்றப் புலனாய்வு பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய சங்கத் தலைவர் பாண்டி, துணைத்தலைவர் பிரேமானந்தம் ஆகியோரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர். பல ஆண்டுகளுக்குப் பின்னர், இச்சம்பவத்தில் தொடர்புடைய இருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதைத்தொடர்ந்து மோசடி குறித்த விசாரணையை தீவிரப்படுத்தி, இழப்பீட்டு தொகையை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் பரவலாக எழுந்துள்ளது.