உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் திருவிழாக்களில் நவராத்திரி விழா மிகவும் சிறப்பு வாய்ந்தது.
அந்த வகையில் நவராத்திரி விழா அக்டோபர் 17 முதல் 25ஆம் தேதி வரை நடக்கிறது. இதனையொட்டி மீனாட்சியம்மனின் அலங்காரத்தை பக்தர்கள் தரிசிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நாள்தோறும் மாலை 4 மணி முதல் 5. 30 மணி வரை, மாலை 6. 45 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் மூலஸ்தான அம்மனை தரிசிக்கலாம். மாலை 5. 30 மணி முதல் 6. 45 மணி வரை மூலஸ்தான சன்னதியில் திரை போட்டு அபிஷேகம், பூஜைகள் நடக்கின்றன. பக்தர்கள் கொலு மண்டபத்தில் உற்சவர் அம்மனை தரிசிக்கலாம்.