மதுரையில் மத்திய ஆயுதப்படை காவல் துறையின் உதவி கமாண்டன்ட் பணியிடங்களுக்கான, யுபிஎஸ்சி தேர்வு இன்று(ஆக. 8) நடைபெற்றது. 6 மையங்களில் காலை, பிற்பகல் நடைபெற்றத் தேர்வில் பங்கேற்க 2 ஆயிரத்து 382 தேர்வர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் காலை நடைபெற்ற தேர்வில் 759 பேரும், பிற்பகல் தேர்வில் 745 பேரும் மட்டுமே பங்கேற்றனர். இரண்டு தேர்வுகளிலும் ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்கவில்லை. வெறும் 32 சதவீதம் பேர் மட்டுமே யுபிஎஸ்சி தேர்வில் பங்கேற்றுள்ளனர்.