தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரையில் பெட்டிக்கடையில் குட்கா விற்றவர் கைது - Gutka for sale at a small shop in Madurai

மதுரை: பெட்டிக்கடையில் குட்கா, பான் மசாலா ஆகிய தடை செய்யப்பட்டப் பொருள்களை மொத்தமாக விற்பனை செய்து வந்த நபரை, காவல் துறையினர் கைது செய்தனர்.

குட்கா விற்றவர்
குட்கா விற்றவர்

By

Published : Nov 5, 2020, 8:10 AM IST

மதுரை மாவட்டம், வலையங்குளம் பகுதியில் குட்கா, பான் மசாலா போன்ற தடை செய்யப்பட்டப் பொருள்களை மொத்தமாக விற்பனை செய்வது குறித்து பெருங்குடி காவல் நிலையத்திற்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் பேரில், பெருங்குடி காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று சோதனை மேற்கொண்டனர்.

திருப்பரங்குன்றம் வட்டம், வலையங்குளம் சௌராஷ்டிரா காலனிப் பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வரும் அன்சாரி (46), பெட்டிக் கடையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் குட்கா, பான் மசாலா ஆகிய பொருள்கள் மொத்தமாக விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்தது.

இதையடுத்து காவல் துறையினர் அன்சாரியைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரிடம் இருந்து 65 கிலோ அளவில் குட்கா, பான் மசாலா ஆகியப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதையும் படிங்க:சென்னையில் 3 டன் குட்கா பறிமுதல் - 3 பேர் கைது!

ABOUT THE AUTHOR

...view details