மதுரை கான்சா மேட்டுத்தெரு பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் மைதி. இவர் அதே பகுதியில் நகை கடை, நகை பட்டறை நடத்தி வருகிறார். இந்நிலையில் பட்டறையில் வேலை செய்துவந்த மேற்குவங்கத்தை சேர்ந்த அவிஜ்த் போனிக் என்ற இளைஞர் நகைக் கடையில் இருந்த சுமார் 62 சவரன் நகையை கடந்த மாதம் திருடிச் சென்றுள்ளார்.
வேலை பார்த்து வந்த கடையில் கைவரிசை: மேற்குவங்க இளைஞர் கைது - மதுரையில் 62 பவுன் நகை கொள்ளை
மதுரை: நடைக்கடையில் வேலை பார்த்துவந்த வடமாநில இளைஞர், 62 சவரன் நகையை திருடிச் சென்றதையடுத்து, அந்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.
![வேலை பார்த்து வந்த கடையில் கைவரிசை: மேற்குவங்க இளைஞர் கைது](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4723980-thumbnail-3x2-pound.jpg)
கடையின் உரிமையாளர் அளித்த புகாரைத் தொடர்ந்து, தெற்குவாசல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அந்த இளைஞரை தேடி வந்தனர். அவிஜ்த் போனிக் அவரது சொந்த ஊரான ஸ்ரீராம்புரம் கிராமத்தில் இருப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து காவல் ஆய்வாளர் முருகன் தலைமையில், தனிப்படை அமைத்து காவலர்கள் மேற்குவங்கம் விரைந்தனர். அங்கு மேற்குவங்க காவல்துறையினர் உதவியுடன் இளைஞர் திருடி சென்ற பல லட்சம் மதிப்புள்ள நகையை மீட்டனர். மேலும், அவிஜ்த் போனிக்யை கைது செய்து மதுரை அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: மின் வாரிய ஊழியர் வீட்டில் திருட்டு