சென்னையில் காவல் ஆய்வாளராக பணியாற்றிய சம்பத்குமார் போதைப்பொருள் தடுப்பு மற்றும் நுண்ணறிவு பிரிவு டிஎஸ்பி ஆக மதுரையில் பொறுப்பேற்கிறார். நீலகிரி மாவட்டம் நடுவட்டம் காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றிய அக்பர் கான் மதுரையில் வரதட்சணை தடுப்பு பிரிவு உதவி ஆணையராக பொறுப்பேற்கிறார்.
அதே போல், சென்னை பாதுகாப்பு பிரிவு சிஐடியாக பணியாற்றிய ராஜன், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி துணை கோட்ட டிஎஸ்பியாக பொறுப்பேற்கிறார். தென்காசி குருவிகுளம் காவல் நிலைய ஆய்வாளர் கண்ணன், மதுரை மாவட்ட பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவில் டிஎஸ்பியாக பொறுப்பேற்கிறார்.