மதுரை: மாநகர் பகுதிகளில் ரயில் நிலையம், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய சந்திப்புகளில் கைக் குழந்தைகளுடன் பிச்சை எடுக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதுதொடர்பான புகார்கள் பொதுமக்களிடமிருந்து குழந்தைகள் நல அமைப்பினருக்கும் காவல் துறையினருக்கும் தொடர்ந்து வந்தவண்ணம் இருந்தன. இதனையடுத்து விபசாரம் மற்றும் ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர் குழந்தைகள் நல அமைப்பினருடன் இணைந்து கைக்குழந்தைகளுடன் பிச்சை எடுக்கும் நபர்களைக் கைது செய்யும் நடவடிக்கையில் இன்று (செப்.23) இறங்கியுள்ளனர்.