மதுரை மீனாட்சி கோயில் அறங்காவலர்களாக 5 பேர் பொறுப்பேற்பு மதுரை: அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலின் அறங்காவலர்களாக ஐந்து பேர் இன்று பொறுப்பேற்றுக் கொண்டனர். அறங்காவலர் குழுவிற்கான தலைவர் தேர்தல் பின்னர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகப்புகழ் வாய்ந்த மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் பரம்பரை முறைவழிசாரா அறங்காவலர்களாக நியமிக்கப்பட்ட ஐந்து அறங்காவலர்களும் இன்று (டிச.1) பொறுப்பேற்றுக் கொண்டனர். அறங்காவலர் குழு தலைவர் தேர்தல் நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் அறங்காவலராக அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் தாயார் ருக்குமணி பழனிவேல் ராஜன் உள்பட 5 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் குழுவில், மதுரை அரசரடி ஹார்விநகர் 4ஆவது தெருவைச் சேர்ந்த எம்.சேகர் என்பவரின் மகள் எஸ்.மீனா, மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த பி.கே.எம்.செல்லையா, மதுரை கே.கே.நகர் ஏரிக்கரைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த மு.சீனிவாசன், மதுரை காந்தி நகர் சூமேக்கர் தெருவைச் சேர்ந்த சி.கிருஷ்ணன் மகள் டி.சுப்புலெட்சுமி ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் தக்காராக பணிபுரிந்த கருமுத்து கண்ணன் கடந்த மே மாதம் காலமானார். இதையடுத்து புதிய தக்காராக க.செல்லத்துரை நியமனம் செய்யப்பட்டார். பரம்பரை முறைவழிசாரா அறங்காவலர்களாக நியமிக்கப்பட்ட ஐந்து அறங்காவலர்களும் இன்று காலை பொறுப்பேற்றுக்கொண்டனர். அறங்காவலர் குழு தலைவர் தேர்தல் நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க:சிதம்பரம் தீட்சிதர்களின் குழந்தை திருமண விவகாரம் - அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!