மதுரை : செல்லூர் 24ஆவது மாமன்ற உறுப்பினருக்கு சுயேச்சையாக சங்கரபாண்டி என்பவர் போட்டியிடுகிறார். இவர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.
வாக்களிக்க பணம் பெறக்கூடாது என்பதை வலியுறுத்தி வேட்பு மனு தாக்கலின்போது, டம்மி ரூபாய் நோட்டுக்களோடு மாநகராட்சி அலுவலகம் வந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
இவரின் மகள் ச.நிஷா, செல்லூர் பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் தனது தந்தை போட்டியிட உள்ள பகுதியில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, தனது வீட்டு வாசலில் 'ஓட்டுக்கு பணம் வாங்குவதும், கொடுப்பதும் சட்டப்படி குற்றம்', 'நமது வாக்கு விற்பனைக்கு அல்ல' என வாசகங்களை கோலமாக வரைந்து பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
இதுகுறித்து மாணவி உஷா கூறுகையில், 'ஒவ்வொருவரும் தங்களது ஜனநாயக் கடமையை நேர்மையாக ஆற்ற வேண்டும். எனது தந்தையார் இந்த வார்டில் போட்டியிடுகிறார் என்பதற்காக இந்த விழிப்புணர்வை நான் மேற்கொள்ளவில்லை. பொதுவாக தேர்தல் குறித்து மக்களிடம் மனமாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே என் நோக்கம்' என்றார். மாணவி உஷா, வீட்டு வாசலில் கோலமிடும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : தாம்பரத்தில் அரசு அலுவலகம், டாஸ்மார்க் பார் ஆன அவலம்.. நடவடிக்கை எடுக்கப்படுமா..?