கரோனா வைரஸ் தொற்றுக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பாக செக்கானூரணி காவல் நிலைய ஆய்வாளர் பாண்டி, உயர்நீதிமன்ற மதுரை கிளை வளாக காவல் நிலைய சார்பு ஆய்வாளர் உமா சங்கர் ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
மதுரையில் இதுவரை கரோனா தொற்றுக்கு 4 காவலர்கள் உயிரிழப்பு! - கரோனாவால் மதுரையில் நான்கு காவலர்கள் பலி
மதுரை: கரோனா வைரஸ் தொற்று காரணமாக மதுரையில் மட்டும் இதுவரை நான்கு காவலர்கள் உயிரிழந்துள்ளனர்.

கரோனா தொற்றுக்கு நான்கு காவலர்கள் இதுவரை பலி - மதுரை காவல்துறையில் சோகம்
இந்நிலையில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பாக மதுரை மீனாட்சியம்மன் கோயில் காவல் நிலைய நுண்ணறிவு பிரிவில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணியாற்றும் மலர் சாமியும், நேற்று சுப்ரமணியபுரம் காவல் நிலைய ஆய்வாளர் சந்தான பாண்டியன் ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்தது மதுரை காவல்துறை வட்டாரத்தில் பெரும் கலக்கத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.