மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பேருந்து நிலைய பகுதிகளில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட ஆன்லைன் மூலம் நடத்தப்படும் லாட்டரி விற்கப்படுவதாக அலங்காநல்லூர் காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, காவல்துறையினர் மாறுவேடத்தில் சென்று லாட்டரி வாங்குவது போல் நடித்து ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்பனை செய்த நான்கு பேரை கைது செய்தனர்.
மதுரையில் ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்பனை - போலீசார் அதிரடி சோதனை - ஆன்லைன் மூலம் லாட்டரி சீட் விற்பனை
மதுரை: அலங்காநல்லூரில் சட்டவிரோதமாக ஆன்லைன் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்த நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
arrest
பின்னர், கைது செய்யப்பட்ட சத்தியசீலன், அர்ச்சுணன், பிரசாந்த், சப்பாணி ஆகியோரிடமிருந்து மூன்றாயிரத்து 500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இச்சம்பவம் குறித்து அலங்காநல்லூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:ஜல்லிக்கட்டு காளையைத் துன்புறுத்தி உயிரிழக்கச் செய்த இளைஞர்கள்!