மதுரைமாவட்டம், பொங்கல் திருநாளையொட்டி, உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் முறையே ஜனவரி 16, 17 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இதன் ஒருபகுதியாக, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை இன்று (ஜன.14) தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் நேரில் ஆய்வு செய்தார்.
வாடிவாசல், மாடு பிடிக்கப்படும் இடம், பார்வையாளர் மாடம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அவர் ஆய்வுகள் மேற்கொண்டார்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகளை தென்மண்டல ஐஜி அஸ்ரா கர்க் பார்வையிட்டார் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, 'அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் பாதுகாப்புப் பணியில் 3000 போலீசார் ஈடுபடுவர். போலீசார் பணி நேரம் சுழற்சி முறையில் இருக்கும். கடந்த ஆண்டு போலவே, இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு சிறப்பாக நடைபெறும்' என்று தெரிவித்தார்.
இதில், மதுரை டிஐஜி பொன்னி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கமிட்டியினர் பேரூராட்சிப் பணியாளர்கள் எனப் பலர் இருந்தனர். குறிப்பாக, 15-வது ஆண்டாக இந்த ஜல்லிக்கட்டு அரசு விழாவாக நடத்தப்படுகிறது. இதனிடையே இந்த ஜல்லிக்கட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: Tasmac:ஜல்லிக்கட்டுப்போட்டிகள்.. 3 நாள்களுக்கு டாஸ்மாக் மூடல்!