மதுரை:கடந்த 2022 ஜனவரி மாதம் பாண்டிகோயிலில் அறக்கட்டளை அலுவலகத்தில் தட்டுப்பணம் 3 லட்ச ரூபாய் திருடப்பட்டது. இது தொடர்பாக செல்லப்பாண்டி பூசாரி, மாட்டுத்தாவணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில் லெட்சுமி, ரெபெல்லோ, ராஜேஷ்பாண்டி, பாண்டியராஜன், ரிஷிபாண்டியன் ஆகியோர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி 5 பேரும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி முரளிசங்கர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி, பாண்டிகோயில் தொடர்பாக இரு தரப்பு இடையே பிரச்சினை உள்ளது. உரிமையியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. உயர்நீதிமன்றம் தற்போதைய நிலை தொடர வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.