மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கடந்த 7ஆம் தேதி இரவு மழையின் காரணமாக மின்சாரம் தடை ஏற்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த மூன்று நோயாளிகள் சுவாசக் கருவி இயங்காமல் உயிரிழந்ததாக புகார் எழுந்தது.
மின்தடையால் 3 நோயாளிகள் பலி: மருத்துவ கல்வி இயக்குநரிடம் அறிக்கை தாக்கல்!
மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் மின்தடையால் நோயாளிகள் மூன்று பேர் உயிரிழந்த விவகாரம் குறித்து மருத்துவ கல்வி இயக்குனரிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மருத்துவ கல்வி இயக்குநரிடம் அறிக்கை தாக்கல்
இந்த சம்பவம் தொடர்பாக, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் முதல்வர் வனிதா, மருத்துவ கல்வி இயக்குநர் அலுவலகத்திற்கு நேற்று மாலை முழுமையான அறிக்கையை அனுப்பி வைத்துள்ளார். இந்த அறிக்கையில், இறந்ததாக கூறப்படும் நோயாளிகளின் உடல்நிலை குறித்தும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட மருத்துவர் குறித்தும் மருத்துவமனையில் என்ன மாதிரியான வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்பது குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.