மதுரை மாவட்டம் சமயநல்லூர்-திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் காவல் நிலையம் அருகே சமயநல்லூர் பாலம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் செல்லும் பொதுமக்களை வழிமறித்து செல்போன்களைப் பறித்துச்செல்வதாக அப்பகுதி காவல் துறையினருக்குப் புகார் வந்தது.
இதனையடுத்து, காவல் துறையினர் தனிப்படை அமைத்து வழிப்பறி கும்பலைத் தேடிவந்தனர். இந்த நிலையில் இன்று காலை இருசக்கர வாகனத்தில் சென்ற திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த சுந்தரமகாலிங்கம் என்பவரை வழிமறித்து தாக்கிய கும்பல் அவரது இருசக்கர வாகனம், ஒரு செல்போன் ஆகியவற்றைப் பறித்துவிட்டு தப்பிச்சென்றனர்.
பைக், செல்போன்களை வழிப்பறி செய்துவந்த 3 இளைஞர்கள் கைது! - Bike robbery in Madurai
மதுரை: சமயநல்லூரில் காவல் நிலையம் அருகே சாலையில் இருசக்கர வாகனத்தில் செல்வோரை வழிமறித்து, பைக், செல்போன்களை வழிப்பறி செய்துவந்த 3 இளைஞர்களை காவல் துறையினர் கைதுசெய்தனர்.
![பைக், செல்போன்களை வழிப்பறி செய்துவந்த 3 இளைஞர்கள் கைது! மதுரை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-9734060-347-9734060-1606883378253.jpg)
மதுரை