அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர், ஓட்டப்பிடாரம் உள்ளிட்ட நான்கு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே.19ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்கள் ஏப்ரல் 22ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 29ஆம் தேதி வரை நடைபெற்றது. அதில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக 63பேர் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தனர்.
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்: 44 வேட்புமனுக்கள் ஏற்பு! - Thiruparankundram
மதுரை: திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக 63 வேட்பு மனுக்கள் பெறப்பட்ட நிலையில், 44 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டு 19 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் நடத்தும் அலுவலர் பஞ்சவர்ணம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை தேர்தல் நடத்தும் அலுவலர் பஞ்சவர்ணம், தேர்தல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேர்தல் நடத்தும் அலுவலர் பஞ்சவர்ணம், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காகத் தாக்கல் செய்யப்பட்ட 63 வேட்புமனுக்களில் 44 மனுக்கள் ஏற்கப்பட்டு, 19 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது என்றார்.
மேலும், அதிமுக வேட்பாளர் தாக்கல் செய்த வேட்புமனுவில் பிழை இருப்பதாக திமுக தரப்பில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், புகாரளித்தவர்களுக்கு உரிய விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. விதிமுறைபடியே அதிமுக வேட்பாளரின் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.