மதுரை விளாங்குடி பகுதியில் உள்ள வின்சென்ட் நகரில் செயல்பட்டு வரும் தனியாருக்குச் சொந்தமான முதியோர் இல்லத்தில் ஆதரவற்ற முதியவர்கள், பணியாளர்கள் என, மொத்தம் 110 பேர் தங்கியுள்ளனர்.
இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு அனைவருக்கும் சுகாதாரத்துறையினரால் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அங்கு தங்கியுள்ள 21 முதியவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதைவிட அதிர்ச்சி அங்குப் பாதிக்கப்பட்ட முதியவர்களை இதுவரை முகாம்களுக்கு அழைத்து செல்லவோ, தனிமைப்படுத்தவோ இல்லை. பாதிக்கப்பட்டவர்கள் 60 வயதைக் கடந்தவர்கள் என்பதால், அவர்களுக்கு ஏற்கனவே சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் உள்ளிட்ட இணை நோய்கள் இருக்கக்கூடும் எனவும், தாமதம் இன்றி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.
கரோனா தொற்று வயதானவர்களை அதிகம் பாதிப்புக்குள்ளாக்கி வரும் சூழலை உணர்ந்து, சம்மந்தப்பட்டவர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
முதியோர் இல்லத்தில் 21 பேருக்கு கரோனா! - madurai
மதுரை: விளாங்குடியில் செயல்பட்டு வரும் முதியோர் இல்லம் ஒன்றில் 21 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதியோர் இல்லத்தில் 21 பேருக்கு கரோனா!
இதையும் படிங்க: இ-பதிவில் சந்தேகமா?' - கால் செய்யுங்கள்... கட்டணமில்லை...